சிறிது நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் மூலம், வேதாத்திரி மகரிஷி அவர்களின் “Audio speech” பெற்றேன்,
"வித்து" திரவத்தை மீண்டும் உடலில் செலுத்தி எப்படி நோய்களை குணப்படுத்தலாம் என்பதை சுறுக்கமாக விளக்கியிருந்தார்.
அதில் ஒரு இடத்தில் பின்வருமாறு ஒரு விளக்கம் தந்திருந்தார் “ ஒரு முறை உடலில் கழிவாக வெளியேறியது, மீண்டும் உடலுக்கு வரும் பொழது, எந்த இடத்தில் அது விடு பட்டதோ, அதே இடத்தில் அது மீண்டும் பிடி படும்..............நோய் குணமாகும்”, என்று குறிப்பிடிருந்தார்.
அதைக் கேட்ட உடன் எனக்கு பல கேள்விகள் எழுந்தன, சில சிந்தனைகளும் ஓடின, அதன் விளைவே இந்த சிறிய கட்டுரை.
கேள்விகள்:
- உடலுக்கு தேவையில்லை என்று ஒதுக்கிய ஒரு பொருள் (கழிவு), எப்படி இரண்டாவது முறையாக வரும் பொழுது உடலின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்கிறது (நோய் தீர்க்கும் மருந்தாக வேலை செய்கிறது)?
- கழிவில் உள்ள மருந்தை உடல் ஏன் முன்பே கண்டுகொள்ளவில்லை?
- முதன் முறை விடுபட்டது எப்படி இரண்டாவது முறையாக வரும் பொழுது பிடி பட்டது?
இந்த கேள்விக்கு விடை காண வேண்டும் ஏன்றால், சில அடிப்படை தத்துவங்களை “வேதாத்திரி மகரிஷி” அவர்கள் விளக்கியவாறு தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் வலி, நோய் மற்றும் மருந்து என்பதை சுருக்கமாக விளக்கிகொள்வோம்.
வலி என்றால் என்ன?
உயிர் ஓட்டத்தில் ஏற்படும் தடையே வலியாக உணரப்படுகிறது. உயிர் என்பது ஒரு நுண்ணிய ஆற்றல் துகள், அதன் இயல்பான ஊக்கம் (இயல்பூக்கம்), உடல் முழுவதும் சுழன்று ஓடுவதுதான். இந்த உயிர் ஓட்டம் தடையில்லாமல் நடைபெற மூன்று முக்கிய ஓட்டங்கள் சீராக நடைபெற வேண்டும், அவை
- இரத்த ஓட்டம்
- காற்றோட்டம்
- வெப்ப ஓட்டம்
இந்த மூன்றும் உடலில் தங்குதடையின்றி சீராக சூழன்று ஒடுமேயானால், உயிர் ஓட்டம் சீராக இருக்கும், உயிருக்கும் உடலுக்கும் ஒரு இணக்கமான உணர்வு இருக்கும். இந்த இணக்கமான உணர்வையே நாம் சுகமாகவும், ஆரோக்கியமாகவும் உணர்கிறோம். இந்த ஓட்டங்களில் ஏதேனும் ஒன்று குழப்பம் அடைந்தாலும் சரி, அது மற்ற ஓட்டங்களையும் பாதிக்கும், உயிர் ஓட்டத்தில் தடை ஏற்படுத்தும். தடையின் அளவிற்கு ஏற்றார் போல் வலி உணரப்படும். இந்த வலி இடத்தலோ, காலத்தாலோ நீடித்தால் அதையே நாம் நோய் (dis-ease = dis + ease) என்கிறோம்.
கழிவு:
உடலில் உள்ள முக்கிய ஓட்டங்கள் சீராக இருக்கும் பொழது, உடலில் ஏழு தாதுக்கள் (இரசம், இரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம்) ஒன்றிலிருந்து ஒன்றாக, சீராக மாற்றம் பெருகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட முக்கிய ஓட்டங்களில் தடை ஏற்பட்டால், இந்த ஏழு தாதுக்களாக மாற்றம் பெறுவதிலும் குழப்பம் வரும், ஒன்றில் இருந்து இன்னொரு தாதுவாக முழுவதும் மாற முடியாமல், ஆங்காங்கே தேங்கி நிற்கும். இந்த தேக்கத்தையே உடல் கழிவுகளாக (உ.ம்: சீழ் புண்) வெளியேற்றுகிறது.
கழிவு என்பது உடலுக்கு தேவையில்லாதது என்பது பொதுவான கருத்து. ஆனால், உண்மையில், உடலில் ஓட முடியாமல் (ஒவ்வாமை) ஆங்காங்கே தேங்கி நிற்பதே, கழிவுகளாக வெளிவருகிறது. உடலின் முக்கிய ஓட்டங்கள் சீராக இருந்தால், உடலுக்கு தேவையில்லாதது மட்டுமே வெளிவரும், இல்லையென்றால், சில உடலுக்கு தேவையான முக்கிய தாதுக்களும், ஓட்டங்களில் ஏற்படும் தடையால், தேங்கி கழிவுகளாக வெளியேறுகிறது. அதனால்தான் சிறுநீரக மற்றும் இரத்த பரிசோதனையின் மூலம் உடலில் உள்ள நோய்களை ஓரளவிற்கு கணிக்க முடிகிறது.
உயிர்த்துகளின் பதிவுகள்:
உயிரோட்டத்தில் ஏற்படும் தடையே வலி, நோய் மற்றும் தேவையில்லாத கழிவுகளுக்கு காரணம் என்பதை உணர்ந்தோம். இவ்வாறு உயிர் துகள்கள் தடையை சந்திக்கும் பொழுது, அங்கே என்ன நடக்கிறது என்பதை சற்று ஆழமாக சிந்திப்போம்.
நாம் இதுவரை உயிரை ஒரு துகளாகவே விவரித்தோம், ஆனால் அது உண்மையில் ஒரு “நுண்ணிய சுழல் அலை”, இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள, பின்வரும் “blog” படியுங்கள்
http://ilamsblg.blogspot.sg/
உயிர் ஓட்டத்தில் ஏற்பட்ட தடை சிறியதாக இருப்பின், உயிருக்கு தடையை சமாளித்துக்கொண்டு ஓடுவதற்கு தேவையான பதிவுகள் அனைத்தும் உடனுக்குடன் வந்து விடும், உயிரோட்டம் தடையில்லாமல் ஓடும், வலி இல்லை, நோயும் இல்லை. தடை சற்று அதிகமாக இருந்தால், உயிரால் உடனே அந்த தடை சமாளிக்க முடியாது, இப்பொழுது உயிர் ஆற்றல் தேக்கம் ஏற்படுகிறது, வலி மற்றும் நோய் உணரப்படுகிறது.
உடல், அதன் நோயை குணப்படுத்த, அதற்க்கு வேண்டியது ஒன்றே ஒன்று தான், ஏற்கனவே இந்த நோயை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற அனுபவப்பதிவுகள் மட்டுமே!
எச்சரிக்கை!
காய-கல்பம்:
ஆகையால் மகரிஷி அவர்களின் தத்துவமான காய-கல்பம், உயிர், உயிரிலிருந்து ஏழும் ஜீவ-காந்த அலை, அலைகளின் ஐவகை இயக்கங்களால் வரும் பதிவுகள் இவற்றைப்பற்றி மருத்துவ உலகம் கூர்ந்து ஆராய்ச்சி செய்யவேண்டும். இந்த ஆராய்ச்சி பல அற்புத மருத்துவ முறைகளை சமுதாயத்திற்கு அளிக்கும் என்று கூறி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
இந்த சுழல் அலை அது சுழன்று ஓடும் இடத்திற்கு தகுந்தவாறு உரசலை பெறுகிறது, அந்த உரசலினால் பெரும் அனைத்து அதிர்வுகளும் உயிரின் மையத்தில் சென்று பதிவாகிறது. மீண்டும் அதே வகையான உரசல் வரும் பொழுது, முன்பு சுருங்கி பதிவான அலைகள் விரிகிறது. இவ்வாறு உரசல், உரசலினால் பெற்ற அதிர்வுகள் உயரின் மையத்தில் சென்று சுருங்குதல், மீண்டும் அதே வகையான உரசல் வரும் பொழுது சுருங்கிய அலைகள் விரிதல் என்று மாறி மாறி நிகழும் பொழுது அந்த உயிர்த்துகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் மற்றும் அறிவாட்சித்தரம் உருவாகிறது. இதையே உயிர்த்துகளின் பதிவுகள் என்று குறிப்பிடுகிறோம்.
எந்த எந்த வகையான தடையை சந்தித்து அதிர்வுகளைப்பெற்றதோ அதற்க்கு ஏற்றவாரே பதிவுகள் அமையும், அந்த பதிவில் அடங்கியுள்ள ஆற்றலும் அறிவாட்சித்தரமும், உயிருக்கு அந்த தடையை சமாளித்துக்கொண்டு ஓடும் வல்லமையை தருகிறது.
உயிர் ஓட்டத்தில் ஏற்பட்ட தடை சிறியதாக இருப்பின், உயிருக்கு தடையை சமாளித்துக்கொண்டு ஓடுவதற்கு தேவையான பதிவுகள் அனைத்தும் உடனுக்குடன் வந்து விடும், உயிரோட்டம் தடையில்லாமல் ஓடும், வலி இல்லை, நோயும் இல்லை. தடை சற்று அதிகமாக இருந்தால், உயிரால் உடனே அந்த தடை சமாளிக்க முடியாது, இப்பொழுது உயிர் ஆற்றல் தேக்கம் ஏற்படுகிறது, வலி மற்றும் நோய் உணரப்படுகிறது.
உயிரின் இயல்பான ஊக்கம் (இயல்பூக்கம்), உடல் முழுவதும் சுழன்று ஓடுவதுதான், ஆகையால் எந்த தடை ஏற்பட்டாலும், அதை சமாளித்துக்கொண்டு, ஓட்டத்தை தொடர எல்லா வித முயற்சிகளையும் அது ஏடுத்துகொண்டே இருக்கும் (இதையே மருத்துவ உலகம் நோய் எதிர்ப்பு சக்தி என்று குறிப்பிடுகிறது). அந்த முயற்சிகளால் வரும் பதிவுகளையும் அது பெற்றுக்கொண்டே இருக்கும். அதே நேரத்தில் பதிவுகளுக்கு தடையை சமாளிக்கும் வல்லமை வரும் வரை உயிர் ஆற்றல் அங்கயே தேங்கி நிற்கும். இந்த தேக்கத்தையே உடல் கழிவுகளாக (உ.ம்: சீழ் புண்) வெளியேற்றுகிறது.
அனுபவ பதிவுகள்:
நாம் இப்பொழுது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த கழிவுகளாக வெளியேறும் உயிர்த்துகளில் உள்ள அனுபவ பதிவுகளையே. ஏனென்றால் தடையை எதிர்த்து போராடிய அத்தனை அனுபவங்களும் அதில் பதிவுகளாக உள்ளன. இப்படி அனுபவம் வாய்ந்த உயிர் துகள்களை மீண்டும் உடலில் செலுத்தினால் என்ன ஆகும் என்பதையே நாம் சற்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
ஒருவர் நீந்துவதற்காக முதன் முதலில் நீச்சல் குளத்தில் இறங்குகிறார், நீந்துவதற்காக முயற்சிக்கிறார், உடல் தண்ணீரில் மிதக்க முடிய வில்லை, தலையை வெளியில் எடுத்து மூச்சு வாங்க முடியவில்லை, மூக்கு மற்றும் வாய்களில் நீர் புகுந்து விடுகிறது, மூச்சுத்திணறி நீரை விட்டு வெளியேறுகிறார். நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்பாக அவரிடம் இருந்த பதிவுகளுக்கும், இப்பொழுது நீரில் போராடி எழுந்த பிறகு இருக்கும் பதிவுகளுக்கும் வித்தியாசம் இருக்கும் அல்லவா? இந்த புதிய பதிவுகளோடு மீண்டும் நீரில் இறங்கி முயற்சி செய்கிறார், முன்பு நீந்தியதை விட சற்று சிறப்பாக நீந்துகிறார், இவ்வாறு தொடர்ந்து முயற்சிக்கும் பொழது, அவர் உடல் செல்கள் மற்றும் மூளை செல்களில் ஏற்பட்ட போதிய பதிவுகள் அவருக்கு தண்ணீரில் நீந்துவதற்கு தேவையான அறிவையும் ஆற்றலையும் அளிக்கிறது.
இதே போன்று, தடைகளை எதிர்த்து போராடிய அனுபவம் பெற்ற உயிர்த்துகள்களை மீண்டும் உடலில் செலுத்தும் பொழது, முன்பு எதிர் கொண்ட அதே விதமான தடையை மீண்டும் ஏதிர்கொள்ளும், இப்பொழுது அந்த உயிர்த்துகள்களில் “அனுபவப்பதிவுகளாக உள்ள அறிவாட்சித்தரம்” அதன் இயக்கமாகவே வெளிவரும், அந்த தடையை முன்பு போராடியதை விட மிக நேர்த்தியாகவும், வலிமையுடனும் போரிடும். இவ்வாறு மீண்டும் மீண்டும் உடலில் செலுத்தும் பொழது, அந்த உயிர்த்துகள்களுக்கு தடையை நீக்கி ஓடும் வல்லமை வந்துவிடும். தடை நீங்கி விட்டால் தேக்கம் இல்லை, ஆகையால் வலி சரியாகிறது நோயும் சரியாகிறது.
தடுப்பூசிகளும் இந்த முறையில்தான் வேலை செய்ய வேண்டும். எந்த கிருமிகளால் நோய் வருமோ, அதே கிறுமிகளை ஒரு சிறு அளவில் உடலில் செலுத்துகிறோம், அப்பொழுது கிருமிகள் முக்கிய ஓட்டங்களில் ஒரு வகையான தடையை ஏற்படுகிறது. உயிர்த்துகள்கள் அந்த தடையை சமாளித்து வெற்றி பெரும் அனுபவப்பதிவுகளே, மீண்டும் அதே போல் ஒரு கிருமி வருங்காலத்தில் நுழையும் பொழது, உயிர்த்துகளுக்கு அதனை உடனுக்குடன் சமாளித்துவிடும் திறமையை கொடுக்கிறது. நோய் தடுக்கப்படுகிறது. Homeopathy மருத்துவத்திலும் இதே முறைதான் பயன்படுத்தபடுகிறது.
உடல், அதன் நோயை குணப்படுத்த, அதற்க்கு வேண்டியது ஒன்றே ஒன்று தான், ஏற்கனவே இந்த நோயை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற அனுபவப்பதிவுகள் மட்டுமே!
எச்சரிக்கை!
கழிவுகள் அனைத்தும் மருந்து என்று சொல்வதற்கில்லை, அதில் உடலுக்கும் தேவையில்லாததும் கலந்தே வருகிறது. ஆகையால், இதைப்படித்துவிட்டு, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் எடுத்து உடலில் தாமாகவே செலுத்தக்கூடாது, இதற்கு கண்டிப்பாக பல விதி முறைகள் தேவைப்படும்.
உ.ம்: சிறுநீர் சிகிச்சை, இதை பயன் படுத்துபவர்கள் கண்டிப்பாக உணவில் சில பத்திய முறைகளை பின் பற்ற வேண்டும், இல்லையெனில் சில தேவை இல்லாத தாதுக்கள் உடலில் செலுத்தப்பட்டு பக்க விளைவுகள் வரக்கூடும். ஆகையால் இந்த துறையில் அனுபவம் வாய்ந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே பின்பற்ற வேண்டும்.
காய-கல்பம்:
மகரிஷி அவர்களின் ஒரு உன்னதமான பயிற்சி முறையான காய-கல்பம், வித்துக் கழிவையே (ஆண்களுக்கு விந்து, பெண்களுக்கு நாதம்) மீண்டும் உடலுக்கு செலுத்த வல்லது. வித்துவில் வந்த நோய், வரப்போகிற நோய் அனைத்தும் பதிவுகளாக உள்ளன. ஆகையால், அதையே மீண்டும் உடலில் செலுத்தும் பொழது, அது பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அற்புத மருந்தாக வேலை செய்யும் என்பது மகரிஷியின் அவர்களின் கருத்து.
ஆகையால் மகரிஷி அவர்களின் தத்துவமான காய-கல்பம், உயிர், உயிரிலிருந்து ஏழும் ஜீவ-காந்த அலை, அலைகளின் ஐவகை இயக்கங்களால் வரும் பதிவுகள் இவற்றைப்பற்றி மருத்துவ உலகம் கூர்ந்து ஆராய்ச்சி செய்யவேண்டும். இந்த ஆராய்ச்சி பல அற்புத மருத்துவ முறைகளை சமுதாயத்திற்கு அளிக்கும் என்று கூறி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
வாழ்க வளமுடன்!
இளம்பரிதி




.jpg)
